Page Loader
எஸ்.டி.ஆர்-48 படத்தில் ஹீரோயின் அதிரடி மாற்றம்-சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்?
எஸ்.டி.ஆர்-48 படத்தில் ஹீரோயின் அதிரடி மாற்றம்-சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்?

எஸ்.டி.ஆர்-48 படத்தில் ஹீரோயின் அதிரடி மாற்றம்-சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்?

எழுதியவர் Nivetha P
May 19, 2023
05:46 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகில் முக்கிய முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் சிம்பு, இடையில் இவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது அவர் நடிக்கவிருக்கும் திரைப்பட அறிவிப்பு ஒன்று அண்மையில் வெளியானது. அதன்படி அவர் நடிப்பில் அடுத்ததாக எஸ்.டி.ஆர்-48 என்னும் படம் தயாராகி வருகிறது. இப்படத்தினை உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார், தேசிங்கு பெரியசாமி இப்படத்தினை இயக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. எஸ்.டி.ஆர்-48 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது துவங்கி விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இப்படத்திற்காக பயிற்சியினை மேற்கொள்வதற்காக சிம்பு தற்போது லண்டன் சென்றுள்ளார்.

சிம்பு 

அதிக சம்பளம் கேட்கும் தீபிகா படுகோன் 

இந்நிலையில் இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போதைய தகவல் படி, தீபிகாவை இரண்டாம் ஹீரோயின் கதாபாத்திரத்திற்காக தான் கேட்டதாகவும் அவர் அதிகளவில் பணம் கேட்பதால் வேறு நடிகையிடம் படக்குழு ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிகிறது. அதே போல் இந்த கதாபாத்திற்கு முக்கியத்துவம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே சிம்பு ஜோடியாக இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.