Page Loader
நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு 'GOAT' படத்தின் டீசர் வெளியீடு 

நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு 'GOAT' படத்தின் டீசர் வெளியீடு 

எழுதியவர் Sindhuja SM
Jun 22, 2024
12:18 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு 'GOAT' படத்தின் டீசர் இன்று வெளியீடப்பட்டுள்ளது. தளபதி விஜய் தனது 50வது பிறந்தநாளை இன்று(ஜூன் 22) கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரது அடுத்த படமான வெங்கட் பிரபுவின் 'GOAT' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. இந்த டீசரில் பெரும் சண்டை காட்சிகள், பைக் சேஸ் போன்ற விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில் விஜய் வயதான கதாபாத்திரத்திலும், அதே கேரக்டரின் இளைய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். GOAT என்பது ஒரு அறிவியல் புனைகதை ஆக்‌ஷன் திரைப்படமாகும். தற்போது உருவாகி வரும் இப்படத்தில், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், வைபவ், மீனாட்சி சவுத்ரி, சினேகா, மோகன், லைலா மற்றும் ஜெயராம் ஆகிய பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.

கோலிவுட்

50 வது பிறந்தநாளை நடிகர் விஜய் கொண்டாடப்போவதில்லை 

இப்படத்தை வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். விஜய்யின் பிறந்தநாளில் இதற்கான டீசர் வெளியீடபட்டிருக்கும் நிலையில், தயாரிப்பாளர்கள் இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான சின்ன சின்ன கண்கள் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். இது மறைந்த பாடகி பவதாரிணியின் AI குரலால் பாடப்பட்டுள்ளது. இது அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பாடகி பவதாரிணி, இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் சகோதரியும் ஆவார். GOAT டீசர் வெளியிடப்பட்ட போதிலும், சமீபத்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகளை தொடர்ந்து, விஜய் தனது 50 வது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

'GOAT' படத்தின் டீசர் வெளியீடு