உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் 'ஆபரேஷன் சிந்தூர்' திரைப்படம்; யார் இயக்குனர்
செய்தி முன்னோட்டம்
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட புகழ் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் டி-சீரிஸ் பூஷண் குமார் ஆகியோர் இணைந்து, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற புதிய பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ் 'டைனி' தில்லான் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. 2025-ஆம் ஆண்டு பஹல்காம் பகுதியில் அப்பாவிச் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்திய ராணுவம் நடத்திய துல்லியமான 'மின்னல் வேக'த் தாக்குதல்களை இந்தப் படம் விவரிக்கிறது.
விவரங்கள்
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் கருத்து
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இது பற்றி கூறுகையில், "இது வெறும் பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமல்ல, நவீன காலப் போர்களில் இந்தியாவின் வலிமையை உலகிற்குப் பறைசாற்றிய நிகழ்வு. இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுடன் இணைந்து விரிவான கள ஆய்வுகளை மேற்கொண்டு, திரையில் வராத பல உண்மைகளை இந்தப் படத்தில் கொண்டு வரவுள்ளோம்," எனத் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் பூஷண் குமார், "சில கதைகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை, அவை நம்மைத் தேர்ந்தெடுக்கின்றன. உண்மையை நேர்மையாகவும், பொறுப்புடனும் ஆவணப்படுத்த வேண்டியது அவசியம்," எனக் கூறியுள்ளார். ப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.