
விக்ரம் vs ஜெயிலர் - இரண்டு படங்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் ஓர் பார்வை
செய்தி முன்னோட்டம்
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் 'விக்ரம்'.
இப்படம் ரூ.450கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் 10ம்தேதி ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்'ஜெயிலர்'.
இத்திரைப்படம் இன்னும் ஒருசில நாட்களில் விக்ரம் திரைப்படத்தின் வசூலினை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.
எனினும், இத்திரைப்படங்களின் இடையே பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாக ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரங்களிலும் பேச்சுக்கள் உலா வந்துக்கொண்டிருக்கிறது.
அதன்படி, இந்த இருத்திரைப்படங்களின் ஹிட்டிற்கு மிகப்பெரிய காரணமானவர் இசையமைப்பாளர் அனிருத்.
இவரின் பின்னணியிசை இப்படங்களுக்கு வேறொரு பரிமாணத்தை கொடுக்க பேருதவியாக அமைந்திருக்கும்.
அடுத்து, விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில், என மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளம் நடித்திருந்தாலும் இறுதிக்காட்சியில் வரும் சூர்யாவின் கேமியோ வேறலெவலில் இருக்கும்.
ஒற்றுமைகள்
'விக்ரம்' பட வெற்றியினை மிஞ்சிய 'ஜெயிலர்'
அதேபோல் ஜெயிலர் படத்தில் வரும் சிவ ராஜ்குமார் மற்றும் மோகன்லால் கேமியோ திரையரங்கத்தினை அதிரவைக்கும் வகையிலான கைதட்டல்களை பெற்றுள்ளது.
தொடர்ந்து, இந்த 2 படங்களிலும் காணப்படும் மிகப்பெரிய ஒற்றுமை, மகன் சென்டிமெண்ட்.
'விக்ரம்' படத்தில் கமலின் மகன் நல்லவராக காண்பிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், ஜெயிலரில் ரஜினியின் மகன் கதாபாத்திரம் நெகட்டிவ்'ஆக காண்பிக்கப்பட்டிருக்கும்.
அடுத்தது இப்படங்களின் இன்டர்வெல் பிளாக், இரண்டிலுமே ரஜினி, கமலின் ட்ரான்ஸ்பர்மேஷன் மாஸாக இருக்கும்.
விக்ரம் படத்தில் 'சக்கு சக்கு வத்திக்குச்சி'என்னும் பழையப்பாடல் பயன்படுத்தப்பட்டு ட்ரெண்டாக்கப்பட்டது.
ஜெயிலர் படத்தில் வர்மன் கேங் 'தால் இசை' மற்றும் 'கண்ணோடு காண்பதெல்லாம்' உள்ளிட்ட பாடல்களுக்கு நடனமாடி ட்ரெண்டாக்கியுள்ளார்கள்.
பல விஷயங்கள் 'விக்ரம்' படத்தின் சாயலை கொண்டிருந்தாலும் இதன் வெற்றியினை மிஞ்சியுள்ளது ரஜினியின் 'ஜெயிலர்'என்றால் அது மிகையாகாது.