Page Loader
விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட் 
விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட்

விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட் 

எழுதியவர் Nivetha P
Jul 15, 2023
07:09 pm

செய்தி முன்னோட்டம்

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2017ம்ஆண்டு துவங்கப்பட்ட தமிழ் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. நடிகர் சூர்யாவிற்காக எழுதப்பட்ட இக்கதையில் அவர் நடிக்கமறுத்த காரணத்தினால் சில மாற்றங்கள் செய்யப்பட்டு நடிகர் விக்ரம் அதில் ஹீரோவாக நடிக்கிறார். சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்துவர்மா, பார்த்திபன்,பிரித்விராஜ் சுகுமாறன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்'ஒரு மனம்'பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப்பெற்றது. எனினும், அதன்பின்னர் இப்படம் குறித்த எவ்வித அப்டேட்களும் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் சற்று சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் பின்னணி இசைத்துவங்கியதாக அண்மையில் துவங்கியதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து இப்படத்தின் 2ம்-பாடலான 'his name is john' வரும் ஜூலை 19ம்தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

விக்ரம் படத்தின் புதிய அப்டேட்