வீட்டை விட்டு அனுப்ப முடியாது! கணவர் விஜய்க்கு எதிராக சங்கீதா புதிய மனு; த்ரிஷாவுடன் வைரலாகும் புகைப்படங்களுக்கு மத்தியில் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், குடும்ப நல நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். 26 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து கோரியுள்ள நிலையில், தற்போது தனது வசிக்கும் உரிமை மற்றும் நிதிப் பாதுகாப்பு குறித்து இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
உரிமை
குடியிருப்பு உரிமை மற்றும் ஜீவனாம்சம்
பிரிட்டிஷ் குடிமகளான தனக்கு இந்தியாவில் சொந்தமாக வீடு இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள சங்கீதா, பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்: தங்கும் உரிமை: தற்போது வசித்து வரும் இல்லத்திலேயே தொடர்ந்து தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் அல்லது விஜயின் அந்தஸ்திற்கு ஏற்ற மாற்று இடவசதியை அவர் செய்து தர வேண்டும். அச்சுறுத்தல் புகார்: விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினால், வீட்டில் தங்க அனுமதி மறுக்கப்படும் என விஜய் எச்சரித்ததாக சங்கீதா தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். ஜீவனாம்சம்: நியாயமான மற்றும் நிரந்தரமான ஜீவனாம்சத் தொகையை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
சர்ச்சை
த்ரிஷாவுடனான சந்திப்பும் சர்ச்சையும்
தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஒரே காரில் வந்திறங்கிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சங்கீதாவின் இந்த மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் ஒரு சக நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், இது தனது குடும்பத்திற்கு மன உளைச்சலைத் தருவதாகவும் சங்கீதா ஏற்கனவே விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார். 1999 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியினருக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.