LOADING...
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்புப் பயணம்: டிச. 4-இல் மீண்டும் தொடக்கம் 
விஜய், மக்கள் சந்திப்புப் பயணத்தை சேலத்தில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்புப் பயணம்: டிச. 4-இல் மீண்டும் தொடக்கம் 

எழுதியவர் Venkatalakshmi V
Nov 20, 2025
02:31 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் நடிகர் விஜய், தன்னுடைய மக்கள் சந்திப்புப் பயணத்தை டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் தொடங்கவுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, விஜய் டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை தொடங்க காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த முறை அவர் வாரத்தில் 2 நாட்கள், 2 மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். கடந்த முறை வார இறுதி நாட்களில் மக்கள் சந்திப்புகள் திட்டமிடப்பட்ட நிலையில், இந்த முறை வார நாட்களில் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்தின்போது, சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் இன்றிச் சந்திப்புக்களை நடத்த, காவல்துறையிடம் முறையான அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் கோரிக்கை

பயணத் திட்டமும், பாதுகாப்புக் கோரிக்கையும்

சேலத்தில் மக்கள் சந்திப்பு நடத்த, தவெக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சில குறிப்பிட்ட இடங்களைச் சுட்டிக்காட்டி காவல் ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். பிரசாரத்திற்காக போஸ் மைதானம், கோட்டை மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய இடங்களைப் பயன்படுத்துவதற்குக் கட்சியினர் மனு அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, விஜய் தனது பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தார். கரூர் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கழித்து, டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் தனது பிரசாரப் பயணத்தை மீண்டும் தொடங்க விஜய் முடிவு செய்துள்ளார்.