Page Loader
விஜய் சேதுபதி- கத்ரீனா கைஃப் நடிக்கும் 'Merry Christmas' திரைப்படம், டிசம்பர் 15 வெளியீடு 
விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப் நடிக்கும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வரும் டிசம்பர் 15 வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

விஜய் சேதுபதி- கத்ரீனா கைஃப் நடிக்கும் 'Merry Christmas' திரைப்படம், டிசம்பர் 15 வெளியீடு 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 17, 2023
02:22 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் சேதுபதி, சைலண்டாக கத்ரீனா கைஃப் திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். அப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. 'Merry Christmas ' என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் நேரடியாக வெளியாகிறது. மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்படுமா எனத்தெரியவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகை ஒட்டி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம், வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஒரு போஸ்டர் மூலமாக படக்குழு அறிவிக்க, அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பாலிவுட் நடிகை கத்ரீனா. இந்த படத்தை இயக்கியிருப்பது ஸ்ரீராம் ராகவன். இது ஒரு திரில்லர் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம், டிசம்பர் 15 வெளியீடு