
FEFSI ஊழியர்களுக்கு வீடு கட்ட 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் தந்த விஜய் சேதுபதி
செய்தி முன்னோட்டம்
சென்ற ஆண்டு, FEFSI ஊழியர்களுக்கு வீடு கட்டிதர, நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ருபாய் நன்கொடை அளித்தார்.
250 குடும்பங்களுக்கு வீடு கட்ட அந்த பணம் உபயோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அந்த விழாவில், FEFSI சங்க தலைவர், இயக்குனர் செல்வமணி, இயக்குனர் பாக்கியராஜ், மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் உடனிருந்தனர்.
சமீபத்தில், மே-1 , உழைப்பாளர்கள் தின விழா, சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவில் பங்கேற்ற விஜய் சேதுபதி குறித்து செல்வமணி மேலும் ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார்.
அதாவது, வீடு கட்டி தர விஜய் சேதுபதி அளித்திருந்த பணத்தையும் தாண்டி மேலும் 30 லட்சம் தேவைப்பட்டதாகவும், இந்த தகவல் விஜய் சேதுபதிக்கு தெரிய வர, உடனே அந்த பணத்தையும் தந்ததாகவும் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
நிதி உதவி செய்த விஜய் சேதுபதி
#JUSTIN | சென்னையை அடுத்த பையனூரில் (பெப்சி) சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.1 கோடி உதவி வழங்கிய விஜய் சேதுபதி
— PTPrime (@pttvprime) October 2, 2021
இன்றைய லைவ் அப்டேட்ஸ்> https://t.co/XKhUHTwwQn #NadigarSangam | #FEFSI | #VijaySethupathi | #house | @VijaySethuOffl pic.twitter.com/5WpRIVAQd6