பிக் பாஸ் சீசன் 9: விஜய் சேதுபதியின் அணுகுமுறையில் ஓரவஞ்சனை இருப்பதாக முன்னர் போட்டியாளர் விமர்சனம்
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடுகளில் நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களைக் கையாளும் விதத்தில் ஓரவஞ்சனை உள்ளதாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் விமர்சகருமான ரவீந்திரன் சந்திரசேகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். சனிக்கிழமை (நவம்பர் 22) எபிசோடில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து அவர் முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டு, ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. சான்ட்ரா மற்றும் திவ்யாவுக்கு இடையில் நடந்த ஒரு பிரச்னை குறித்துப் பேசிய விஜய் சேதுபதி, சான்ட்ராவைக் கண்டிக்காமல், "நீ பாவம், உனக்கு ஒண்ணும் தெரியாது, எல்லாத்துக்கும் காரணம் திவ்யாதான்" என்று கூறியதாக ரவீந்திரன் சுட்டிக் காட்டுகிறார்.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி கேட்ட கேள்வி
மேலும், திவ்யாவிடம் பேசிய கடுமையான தொனியையும், "உனக்கு ஒரு வேலையைச் சொன்னால், அதைச் செய்ய வக்கில்லை" என்று திவ்யாவைப் பார்த்து விஜய் சேதுபதி கேட்ட கேள்வியையும் அவர் விமர்சித்தார். அதே தவறைச் செய்த சான்ட்ராவைப் பார்த்துக் கேட்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய ரவீந்திரன், சான்ட்ராவின் கணவர் பிரஜன் கோபித்துக் கொள்வார் என்று விட்டுவிட்டாரா என்றும் வினவினார். திவ்யா உடல்நிலை சரியில்லை என்று கூறியபோதும், அவரிடமே தொடர்ச்சியாகக் கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும், இது முன்னர் கம்ருதீன் கையாளப்பட்ட முறையை ஒத்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். பிக் பாஸ் விதிகளை மீறியவர்கள் சான்ட்ரா மற்றும் திவ்யா இருவரும் இருக்கும்போது, ஒருவரிடம் மட்டும் கடுமையாகப் பேசுவது ஓரவஞ்சனை என்று அவர் குற்றம் சாட்டினார்.