விஜய்யின் அரசியல் ஈடுபாடு குறித்து அவரின் தாயார் ஷோபா சந்திரசேகரின் பேட்டி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆவார். இவரின் அடுத்த படமான வாரிசு வருகிற பொங்கல் ரிலீசாக ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் அஜித் நடிக்கும் துணிவு படத்துடன் களமிறங்க போகிறது. இதனிடையில் இந்த படம் வெற்றியடைய வேண்டி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். தரிசனம் முடித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது; "இந்த உலகமே வியாதி இல்லாம நல்லா இருக்கணும். அபிஷேகம் ரொம்ப நேரம் பார்த்தேன். விஜய் படம் நல்லா ஓட வேண்டும் என்று எல்லாரும் வேண்டிக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.
கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுதான் - அரசியல் குறித்து ஷோபா சந்திரசேகரின் பதில்
அதன் பின்னர் விஜய்யின் அடுத்த படம் பற்றியும், அதில் என்னவாக நடிக்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு "விஜய் வாரிசு படத்திலேயே எந்த மாதிரி நடிக்கிறார் என்று எனக்கு தெரியாது. நீங்க அடுத்த படத்தில் என்னவாக நடிக்கிறார் என்று கேட்கிறீர்கள். ஃபேமிலி சப்ஜெக்ட் படம் என்று மட்டும் தான் தெரியும்" என்று கூறியுள்ளார். அடுத்தாக அவர் அரசியலில் ஈடுபடுவதை பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அதை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். விஜய் என்ன முடிவு செய்கிறாரோ மற்றும் கடவுள் என்ன நினைக்கிறாரோ அது தான். தனக்கும் தன்னுடைய கணவருக்கும் அதை பற்றி எதுவும் தெரியாது என்று பதில் அளித்துள்ளார்.