LOADING...
விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமணம்: பிப்ரவரி 26 அன்று நடைபெறவுள்ளதாக தகவல்
விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமணத் தேதி குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது

விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமணம்: பிப்ரவரி 26 அன்று நடைபெறவுள்ளதாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 01, 2026
05:37 pm

செய்தி முன்னோட்டம்

திரையுலகில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் காதல், விரைவில் திருமணத்தில் முடியவுள்ளதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. சமூக வலைதளங்களில் உலவி வந்த பல்வேறு வதந்திகளுக்கு இடையே, தற்போது இவர்களது திருமணத் தேதி குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது. பிலிம்பேர் வெளியிட்ட செய்தியின்படி, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு பிறகு, ஹைதராபாத்தில் திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வதந்தி

உதய்பூர் வதந்திக்கு முற்றுப்புள்ளி

முன்னதாக, பிப்ரவரி 2-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அங்கு அலங்காரப் பணிகள் நடப்பதாகவும் சில வீடியோக்கள் வைரலாகின. ஆனால், அந்தத் தகவல்கள் தவறானவை என்றும், பிப்ரவரி இறுதியில் தான் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது. 'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இவர்களது ஜோடி பொருத்தம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். நீண்ட நாட்களாக தங்கள் உறவு குறித்து மௌனம் காத்து வரும் இந்தத் தம்பதி, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement