
கார் விபத்தில் சிக்கிய ஷாருக்கான் பட நடிகை காயத்ரி; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட்டின் பிரபல நடிகை காயத்ரி ஜோஷி. காயத்ரியும், அவரது கணவர் விகாஸ்-உம் இத்தாலியில் பெரும் விபத்தை சந்தித்துள்ளார்.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அந்த புகைப்படங்களும், வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காயத்ரி, 2004-ஆம் ஆண்டில் வெளியான 'ஸ்வதேஷ்' என்ற படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர்.
அவர் மும்பையை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் விகாஸ் ஓபராய் என்பவரை திருமணம் செய்துகொண்டு, சினிமாவிலிருந்து விலகிவிட்டார்.
இந்த நிலையில், காயத்ரியும் அவரது கணவரும், இத்தாலிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.
அங்கே லம்போர்கனி சொகுசு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து, இத்தாலியின் சர்டினியா சூப்பர்கார் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த சொகுசு கார் அணிவகுப்பு, டெயுலாடாவிலிருந்து ஓல்பியா வரை நடைபெறும்.
card 2
முந்தி செல்லும்போது நேர்ந்த விபத்து
இந்த அணிவகுப்பில், காயத்ரியின் கணவர், தன் முன்னால் சென்ற ஒரு கேம்பிங் வேன்-ஐ ஓவர்டேக் செய்ய முயற்சித்துள்ளார்.
அதே சமயம், அவரின் பின்னால் வந்த பெர்ராரி கார்-உம் இவர்களை முந்த முயற்சித்துள்ளது.
அந்த பெர்ராரி, ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்களை முந்துவதற்காக, இடது பக்கமாக ஒதுங்கியுள்ளது.
இதில், அந்த பெர்ராரி கார் கட்டுப்பாட்டை இழந்து, காயத்ரியின் வண்டியின் மோதியது. இதில் காயத்ரி சென்ற கார் பள்ளத்தில் விழுந்துள்ளது.
எனினும், காரில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை.
மாறாக, இவர்கள் கார் மீது மோதிய பெர்ராரி, தீப்பற்றி இருந்ததில், காரில் பயணப்பட்ட இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த புகைப்படங்களும், வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
இது பற்றி இத்தாலி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
காரின் டேஷ் கேமில் சிக்கிய கார் விபத்து
Reportedly, Swades actor #GayatriJoshi and husband Vikas Oberoi's car was part of a multiple-vehicle collision which left an elderly couple dead in Italy.#Swades #VikasOberoi #Italy #CarAccident pic.twitter.com/01FWObwFPU
— Theunpopularopinion (@theunp0pu1ar) October 4, 2023