
விடாமுயற்சியின் டீசர் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறதா?
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான விடாமுயற்சி, கடந்த ஆண்டு முதல் பல்வேறு தாமதங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.
நேற்று படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான புகைப்படங்களும் நேற்று வெளியான நிலையில், இன்று மற்றுமொரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
அதன்படி, விடாமுயற்சியின் டீசர் வரும் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என யூகிக்கப்படுகிறது.
தீபாவளி தினத்தன்று படத்தின் முதல் டீசர் வெளியாகலாம் என்று கூறப்பட்ட நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
விடாமுயற்சியை அஜித்துடன், த்ரிஷா, ரெஜினா கேஸன்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#VidaaMuyarchi Teaser expected on Nov 10th 🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) October 29, 2024
Let's see if they reveal the most awaited release date along with the teaser🤞 pic.twitter.com/GQQEVAMEKb