பழம்பெரும் நடிகை வைஜயந்திமாலா 'நல்ல உடல்நலத்துடன்' இருக்கிறார்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்
செய்தி முன்னோட்டம்
பழம்பெரும் நடிகையும், பரதநாட்டிய நட்சத்திரமுமான வைஜயந்திமாலா, 91 வயதிலும் நல்ல ஆரோகியத்துடன் இருப்பதாக அவரது மகன் நடிகர் சுசீந்திர பாலி தெரிவித்துள்ளார்.
முன்னதாக வைஜயந்தி மாலாவின் மறைவு குறித்து ஆன்லைனில் பரவி வந்த வதந்திகளை மறுத்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
"டாக்டர் வைஜயந்திமாலா பாலி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார், வேறுவிதமாகக் கூறும் எந்தச் செய்தியும் தவறானது" என்று அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் என, இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்திய நிகழ்வு
சமீபத்தில் சென்னையில் வைஜெயந்திமாலா நடத்திய பரதநாட்டிய நிகழ்ச்சி
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் நடிகை வைஜயந்திமாலா தனது வசீகரிக்கும் பரதநாட்டிய நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களை ஈர்த்தார்.
இந்த நிகழ்ச்சி கலா பிரதர்ஷினியில் நடைபெற்றது.
அங்கு அவர் கர்நாடக இசையமைப்பான தாசிகனுண்டாவிற்கு நடனமாடினார்.
இசைக்கலைஞர் கிரிஜாசங்கர் சுந்தரேசன் அவருடன் இணைந்து பாடினார்.
தற்போது சுந்தரேசனும் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம், வைஜயந்தி மாலா உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினார்.
"தயவுசெய்து ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள். நாங்கள் இதை விட சிறந்தவர்கள்" என்று அவர் எழுதினார்.
நடிகை வைஜயந்தி மாலா, இந்திய பாரம்பரிய நடனத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக 1982ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதைப்பெற்றார். 2024 ஆம் ஆண்டில், மதிப்புமிக்க பத்ம விபூஷண் விருதைப்பெற்றார்.