
தெலுங்கு நடிகரை கரம் பிடிக்கிறார் 'பிரம்மன்' பட நாயகி லாவண்யா திரிபாதி
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு சினிமாவின் சூர்யா-ஜோதிகா என்று அழைக்கப்படும் வருண் தேஜ்-லாவண்யா திரிபாதி ஜோடிக்கு நாளை(ஜூன்-9) நிச்சயதார்த்தம் நடக்க போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சசிகுமார் நடித்து வெளியான 'பிரம்மன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, சிவிகுமார் இயக்கிய 'மாயவன்' திரைப்படத்திலும் நடித்திருந்த நடிகை தான் இந்த லாவண்யா திரிபாதி.
இவர் தமிழ் சினிமாக்களில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கு சினி உலகில் இவருக்கு கிராக்கி அதிகம்.
வருண் தேஜூம் பல தெலுங்கு படங்களில் கதாநாயகனாக கலக்கி இருக்கிறார்.
இவர்கள் இருவரும் இணைந்து 'மிஸ்டர்' மற்றும் 'அந்தரிக்ஷம்' ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் நாளை நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், "மணமக்கள்" இது குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை.
ட்விட்டர் அஞ்சல்
வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி நிச்சய அழைப்பிதழ் வைரல்
Hearty congratulations to
— 𝐕𝐚𝐦𝐬𝐢𝐒𝐡𝐞𝐤𝐚𝐫 (@UrsVamsiShekar) June 8, 2023
𝑴𝒆𝒈𝒂 𝑷𝒓𝒊𝒏𝒄𝒆 @IAmVarunTej & @Itslavanya on getting Engaged on 9th June, 2023 🤩🥳
Wishing a lifetime of happiness together✨#VarunTejKonidela #VarunTej #LavanyaTripathi pic.twitter.com/bfL9tDC0aV