
வெள்ளை சட்டை, புது ஹேர்ஸ்டைல்; கம்பீரமாக நிற்கும் வடிவேலு
செய்தி முன்னோட்டம்
'வைகை புயல்' வடிவேலு, முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் உடன் இணையும் திரைப்படம் 'மாமன்னன்'.
மாரி செல்வராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியான நிலைமையில், சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
அதில் கையில் கத்தியுடனும், ரத்த கரையுடனும், உதயநிதி ஸ்டாலின் இருக்க, அருகே வடிவேலு வித்தியாசமான கெட்அப்பில் அமர்ந்திருந்தார்.
அந்த போஸ்டர் வைரலானது.
தற்போது வடிவேலு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், வெள்ளை நிற கதர் சட்டையுடன், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் கெத்து காட்டுகிறார்.
அந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
வடிவேலு ட்விட்டர் பதிவு
#Maamannan @Udhaystalin pic.twitter.com/KJeHI3OqP2
— Actor Vadivelu (@Vadiveluhere) May 12, 2023