'அற்புதமான நடிகர்கள்!': சூர்யா, கார்த்தியை நேரில் சந்தித்த டோவினோ தாமஸ் புகழாரம்
மலையாள திரையுலகின் பிரபல நடிகர் டோவினோ தாமஸ். இவர் மின்னல் முரளி, 2018 உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர். அவர் சமீபத்தில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியும் நேரில் சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து கொண்ட டோவினோ தாமஸ்,"நான் நடிகனாக ஆக வேண்டும் என ஆசைப்பட்ட நாட்களில் இருவரும், அவரவர் வழியில் எனக்கு உத்வேகம் அளித்தனர். இன்று இந்த இரண்டு அற்புதமான நடிகர்களின் நடுவே நான் நிற்பதன் மூலம் எனது பயணத்தில் அவர்களின் பங்களிப்பு இருப்பதை உறுதி செய்து கொள்கிறேன். இருவருடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கிறது. கார்த்தியின் 'மெய்யழகன்' திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்" என வாழ்த்தி பதிவிட்டுள்ளார். கார்த்தியின் 'மெய்யழகன்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.