Page Loader
PS -ல் நடித்த நடிகைகளை புகழ்ந்தது ஒரு குத்தமாயா?! விவாத மேடை ஆன ட்விட்டர் பதிவு
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

PS -ல் நடித்த நடிகைகளை புகழ்ந்தது ஒரு குத்தமாயா?! விவாத மேடை ஆன ட்விட்டர் பதிவு

எழுதியவர் Venkatalakshmi V
May 03, 2023
06:01 pm

செய்தி முன்னோட்டம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதுமுதல், சோஷியல் மீடியாக்களில் படத்தை குறித்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ட்விட்டர் பயனர் ஒருவர், படத்தில் நடித்த நாயகிகளை புகழ்ந்து ஒரு ட்வீட் போட்டார். அங்கே ஆரம்பித்தது பிரச்னை! அவர் டீவீட்டில், "முன்னணி கதாபாத்திரத்தில் 49வயது மற்றும் 39வயதான நடிகைகள், மக்களை கவர்ந்தது ஆச்சரியமாக இருக்கிறது. வயதான பெண்களின் அழகை மிகவும் அரிதாகவே பார்க்க முடிகிறது" என்பது போல கூறினார். அதை பார்த்தவர்கள், "ஹீரோயின்களுக்கு மட்டும் ஏன் ஒரு கட்டத்திற்கு மேல், 'வயதான' என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள்? ஹீரோக்களை அப்படி யாரும் சொல்வதில்லையே" என அறைக்கூவல் விட ஆரம்பித்தனர். தொடர்ந்து, சினிமா உலகில், ஆண்கள் வயதிற்கும், பெண்கள் வயதிற்கும் காட்டப்படும் பாரபட்சம் குறித்து விவாதம் கிளம்பியது.

ட்விட்டர் அஞ்சல்

விவாத மேடையான ட்விட்டர் தளம்