அதிமுக மாஜி நிர்வாகி ஏ.வி.ராஜூக்கு 24 மணி நேரம் கெடு விதித்த த்ரிஷா
செய்தி முன்னோட்டம்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகி ஏ.வி.ராஜூவின் அவதூறு கருத்தால், கடந்த நான்கு நாட்களாக தீவிர மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும், தன்னைப் பற்றி அவதூறு தொடர்பான செய்திகள் எந்தெந்த யூடியூப் சேனல்கள், பத்திரிகைகள் மற்றும் டிவிகளில் வந்ததோ அவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் த்ரிஷா.
இந்த நோட்டீசை தனது எக்ஸ் தளத்திலும் பகிர்ந்துள்ளார்.
அந்த நோட்டீஸில், ராஜு எந்தெந்த ஊடகத்தில் பேட்டி அளித்திருந்தாரோ, அவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.