Page Loader
தனது குரலால் நம்மை வசியம் செய்த பின்னணி பாடகர் கே.கேவின் நினைவு தினம் இன்று 
கே.கேவின் நினைவு தினம்

தனது குரலால் நம்மை வசியம் செய்த பின்னணி பாடகர் கே.கேவின் நினைவு தினம் இன்று 

எழுதியவர் Arul Jothe
May 31, 2023
10:26 am

செய்தி முன்னோட்டம்

இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கடந்த வருடம் 2022 மே 31ம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார். கேகேவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1968ம் ஆண்டு டெல்லியில் பிறந்த கிருஷ்ணகுமார் குன்னத் மக்களால் கேகே என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியன் பாப் பாடல்கள் பாடுவதில் பெயர் பெற்றவர் ஆவார். பாலிவுட்டில் அதிகம் பாடல்களை பாடிய இவர் தமிழ் திரைப்படங்களில் 66 பாடல்களை பாடியுள்ளார். காதல் வளர்த்தேன் (மன்மதன்), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க) போன்ற பாடல்கள் அவர் பாடியதே. மேலும் ஏறக்குறைய அனைத்துமே ஹிட் அடித்த பாடல்கள் ஆகும்.

KK's Death Anniversary

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் நினைவு தினம்

பல மாநிலங்களில் ஏராளமான ரசிகர்கள் இருப்பினும் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றவர் கிருஷ்ணகுமார் குன்னத். கடந்த ஆண்டு கொல்கத்தாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்ற கே.கே, குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் பாடல் கச்சேரி நடத்தினார். அப்போது திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது மறைவு திரை உலகத்தினர் மற்றும் ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இசை உலகிற்கே பெரும் இழப்பாக அது கருதப்பட்டது.