
தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம்
செய்தி முன்னோட்டம்
நடிகர் மோகன் ராமின் தந்தை, தமிழக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனெரலாக இருந்தவர். அவரின் பெயரின் V.P.ராமன் ஆகும்.
நீதித்துறை மட்டுமின்றி, அரசியியலிலும் இருந்துள்ளார் V.P.ராமன்.
திராவிட முன்னேற்ற கழகம் துவங்கிய காலத்தில், அதில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட ராமன், திமுகவின் அரசியல் சாசன விதிகளை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னை அவ்வை ஷண்முகம் சாலையை, அவரின் பேரில் VP ராமன் சாலை என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு.
ராமனுக்கு இரு புதல்வர்கள். ஒருவர் நடிகர் மோகன்ராம், அவரின் மகள் தான் காமெடி நடிகையான வித்யுலேகா. மற்றொரு புதல்வர் PS.ராமன். இவரின் மகள் தான் கிதாஞ்சலி, இயக்குனர் செல்வராகவனின் மனைவி.
ட்விட்டர் அஞ்சல்
VP ராமன் சாலை
அவ்வை சண்முகம் சாலையில், மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையுள்ள சாலை பகுதியினை "வி.பி.ராமன் சாலை" என பெயர் மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி தீர்மானம்@News18TamilNadu @karthickselvaa #chennai #VPRaman
— Tamilarasi Dhandapani (@i_tamilarasi) March 28, 2023