
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் 'பீனிக்ஸ் வீழான்' படத்தின் டீசர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் 'பீனிக்ஸ் வீழான்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஒரு புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
ஃபீனிக்ஸ் வீழான் என பெயரிடப்பட்டுள்ள இந்த தமிழ் திரைப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர் அன்ல் அரசு இயக்கியுள்ளார். அவர் இதன் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
சூர்யா இதற்கு முன்பு நானும் ரவுடி தான் (2015) மற்றும் சிந்துபாத் (2019) போன்ற படங்களில் தனது தந்தையுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
பீனிக்ஸ் திரைப்படத்தில் விக்னேஷ், வர்ஷா விஸ்வநாத் மற்றும் பூவையார் ஆகியோரும் நடித்துள்ளனர். ராஜலக்ஷ்மி அரசகுமாரின் ஏ.கே பிரேவ்மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
'பீனிக்ஸ் வீழான்' படத்தின் டீசர் வெளியானது
Dive into the world of #Phoenix, The teaser looks super intriguing Sending all my love & wishes to @ActionAnlarasu. master, #Surya, and the entire team :)
— VijaySethupathi (@VijaySethuOffl) June 16, 2024
🔗 https://t.co/4grTYMU0Fs@varusarath5 @harishuthaman @Abinakshatra @VarshaViswanath @ActorMuthukumar @ActorDileepan… pic.twitter.com/YdOPurD43T