Page Loader
தலைவாசல் விஜய் வீட்டில் விரைவில் டும் டும் டும்: கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்க போகும் விஜயின் மகள்
தமிழ்நாடு கிரிக்கெட் வீரரை மனக்கவிருக்கும் தலைவாசல் விஜயின் மகள்

தலைவாசல் விஜய் வீட்டில் விரைவில் டும் டும் டும்: கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்க போகும் விஜயின் மகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 28, 2023
03:48 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல கோலிவுட் நடிகரான தலைவாசல் விஜய், தனது மகள் ஜெயவீணாவை, ஒரு இளம் கிரிக்கெட் வீரருக்கு திருமணம் நிச்சயித்து இருக்கிறார். 'தலைவாசல்' விஜய்யின் மகளும் ஒரு நீச்சல் வீராங்கனை ஆவர். பல தேசிய போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில், ஜெயவீணாவிற்கும் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர், பாபா அபரஜித் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. பாபா அபரஜித், ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக விளையாடுபவர். அவரும் சிறு வயதிலேயே, அண்டர் -19 கிரிக்கெட் போட்டியில், இந்தியா சார்பாக விளையாடி உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெயவீணாவும், அபராஜித்தும், தங்களது சமூக வலைத்தளத்தில், இந்த இனிய செய்தியை பகிர்ந்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

தலைவாசல் விஜய் வீட்டில் விரைவில் டும் டும் டும்