LOADING...
முதன்முறையாக டாக்டராகும் ரஜினிகாந்த்! 'தலைவர் 173' 5 ரூபாய் டாக்டர் கதையா?
'Thalaivar 173' படத்தில் டாக்டர் வேடத்தில் நடிக்கும் ரஜினி

முதன்முறையாக டாக்டராகும் ரஜினிகாந்த்! 'தலைவர் 173' 5 ரூபாய் டாக்டர் கதையா?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 09, 2026
02:39 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாகவே 'தலைவர் 173' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்புகளும் கிசுகிசுக்களும் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த மாஸ் கமர்சியல் திரைப்படத்தை 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள லேட்டஸ்ட் அப்டேட்டின்படி, இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கதாபாத்திரம் மற்றும் படப்பிடிப்பு குறித்த சில எக்ஸ்குளூசிவ் தகவல்கள் கசிந்துள்ளன.

கதாபாத்திரம்

முதன்முறையாக முழுநீள 'டாக்டர்' வேடத்தில் ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இதுவரை பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 'சந்திரமுகி' படத்தில் சைக்கியாட்ரிஸ்ட் ஆக வந்திருந்தாலும், அவர் இதுவரை ஒரு முழுநீள மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்ததே இல்லை. இணைய செய்திகளின்படி, அண்மையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள RKFI அலுவலகத்தில் இப்படத்திற்கான பிரத்யேக லுக்-டெஸ்ட் போட்டோஷூட் ரகசியமாக நடந்துள்ளது. பிரபல புகைப்படக் கலைஞர் ஜி. வெங்கட் ராம் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார். இதில் ரஜினிகாந்த், கையில் ஸ்டெதாஸ்கோப்புடன் கம்பீரமான ஒரு மருத்துவர் உடையில் தோன்றி அசத்தியுள்ளதாகத் தயாரிப்புத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படப்பிடிப்பு

பூந்தமல்லியில் செட் அமைப்பு; இந்த மாத இறுதியில் ஷூட்டிங்

இயக்குநர் சுந்தர்.சி, அதனைத் தொடர்ந்து 'டான்' சிபி சக்ரவர்த்தி எனப் பல மாற்றங்களைக் கடந்த பின், தற்போது அஸ்வத் மாரிமுத்து கைகளுக்கு வந்துள்ளதாக கூறப்படும் 'தலைவர் 173' படத்தின் முதற்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை பூந்தமல்லியில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் இதற்கான பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சாண்டி மாஸ்டரின் நடன அமைப்பில், ரஜினிகாந்தின் எனர்ஜிட்டிக் மாஸ் ஓப்பனிங் சாங்குடன் ஜூன் 26-ஆம் தேதி அல்லது இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என ஊடக செய்திகள் கூறுகின்றன.

Advertisement