தாய் கிழவி ஓடிடி அப்டேட்: ஏப்ரல் தொடக்கத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது
செய்தி முன்னோட்டம்
அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'தாய் கிழவி' திரைப்படம், பிப்ரவரி 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, 'தாய் கிழவி' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளம் கைப்பற்றியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி 5 வாரங்களுக்குப் பிறகு, அதாவது ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவரங்கள்
தாய் கிழவி படத்தை பற்றிய விவரங்கள்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு ராதிகா ஒரு கிராமத்து முதியவர் வேடத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார். கிராமத்து உணர்வுகளையும், பாசப் போராட்டத்தையும் மையமாகக் கொண்ட இக்கதை அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்தது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், இதுவரை உலகளவில் சுமார் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த் மற்றும் பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.