Page Loader
இத்தாலியில் நடந்த தெலுங்கு நடிகர் வருண் தேஜ் திருமணம்
இத்தாலியில் நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்கள் வைரல்.

இத்தாலியில் நடந்த தெலுங்கு நடிகர் வருண் தேஜ் திருமணம்

எழுதியவர் Srinath r
Nov 02, 2023
12:23 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு நடிகரும், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகனுமான வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி ஜோடியின் திருமணம் உறவினர்கள் சூழ இத்தாலியில் நடைபெற்றுள்ளது. இத்தாலியின் டஸ்கனியில் உள்ள போர்கோ சான் ஃபெலிஸ் ரிசாட்டில் நடைபெற்ற வரவேற்பு விழாவின் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்த வரவேற்பு விழாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ராம்சரண் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கடந்த 2000 ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்த வருண் தேஜ், தற்போது வரை 17 திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான சசிக்குமாரின் பிரம்மன் திரைப்படத்தின் மூலம், லாவண்யா திரிபாதி தமிழில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

பிரம்மன் பட நாயகி உடன் வருன் தேஜ் திருமணம்