Page Loader
கனெக்ட் திரைப்படத்தின் டீஸர் 3 மில்லியன் வியூஸ்களை எட்டியது
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கனெக்ட்

கனெக்ட் திரைப்படத்தின் டீஸர் 3 மில்லியன் வியூஸ்களை எட்டியது

எழுதியவர் Saranya Shankar
Dec 14, 2022
12:41 pm

செய்தி முன்னோட்டம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்த படமே கனெக்ட். இப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தை ரவுடி பிக்சரின் பேனரில் விக்னேஷ் சிவன் தயாரித்து உள்ளார். தமிழ் மொழியில் வெளியாக இருக்கும் இப்படம் ஒரு ஹாரர் த்ரில்லர் (Horror-Thriller). இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும் இவருடன் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் போன்றோர் நடித்துள்ளனர். 2015 இல் மாயா படம் மூலம் நயன்தாராவுடன் இணைந்த இயக்குனர் சரவணனின் இரண்டாவது படம் இது. கேம் ஓவர் பிறகு அஸ்வின் சரவணன் தன் மனைவி காவ்யா ராம்குமாருடன் இணைந்து இந்த கதையை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'கனெக்ட்' டீஸர்

இப்படத்தின் டீஸரை அடுத்து, கனெக்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது

இப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன், சில்வர் ஸ்கிரீன் இந்தியா உடனான போட்டியில் "கொரோனா லாக்டவுனின் போது மனஅழுத்தத்தையும் கவலையும் உணர்ந்தேன். இந்த உணர்ச்சிகளை ஒரு படத்தில் சித்தரிக்க விரும்பினேன். கவலை, பயம், நம்பிகையின்மை போன்றவைகள் திகிலூட்டும் படங்களுக்கான உணர்ச்சிகளை அழகான வெளிப்படுத்துகிறது. மேலும் லாக் டவுன் போது, ஒருவர் நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் தொடர்பு கொள்வது நம் அனைவருக்கும் கடினமாக இருந்ததால், இப்படத்தின் தலைப்பை கனெக்ட் என தேர்ந்தெடுத்தோம்" என கூறியுள்ளார். இப்படத்தின் டீஸர்' 3-மில்லியனுக்கும் மேல் வியூஸ்களை எட்டியதுள்ளது. கனெக்ட் படத்தின் ரிலீஸ் தேதியயை டிசம்பர் 22-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தனர். மேலும் இப்படத்தில் இடைவெளியே கிடையாது என குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி உள்ளது.