
'பாலியல் குற்றவாளிகளை ஆதரிப்போருக்கு எதிர்ப்பு': மு.க.ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசனுக்கு பாடகி சின்மயி கண்டனம்
செய்தி முன்னோட்டம்
பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கும் அனைவரும் அழிக்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கும் பாடகி சின்மயி ஸ்ரீபாதா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவின் 'மகா கவிதை' புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
'மகா கவிதை' புத்தகத்தை முதன்முதலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட அதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.
இந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவை ஆதரரித்ததற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு பாடகி சின்மயி ஸ்ரீபாதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
டவ்ட்ஜ்
'குற்றவாளிகளை ஆதரிக்கும் அமைப்பு அழிந்து போகட்டும்': பாடகி சின்மயி
கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி 5 ஆண்டுகளுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தார்.
அப்போதிலிருந்து வைரமுத்துவுக்கு எதிரான தனது வழக்கை அவர் எடுத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவின் புதிய புத்தக வெளியீட்டு விழா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பாடகி சின்மயி, "நான் எனது வாழ்க்கையின் பல ஆண்டுகளை தொலைந்துவிட்டு நிற்கும் போது, தமிழ்நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் சிலர் என்னைத் துன்புறுத்தியவரை மேடையேற்றுகிறார்கள். பாலியல் குற்றவாளிகளை ஆதரித்து, நேர்மையான நபர்களை சிறையில் அடைக்கும் இந்த அமைப்பு மொத்தமாக அழிந்து போகட்டும். எனது இந்த விருப்பம் நிறைவேறும் வரை தொடர்ந்து நான் பிரார்த்தனை செய்வேன், எப்படியும் என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது." என்று கூறியுள்ளார்.