Page Loader
நடிகை தமன்னா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ
நடிகை தமன்னா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ

நடிகை தமன்னா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ

எழுதியவர் Nivetha P
Aug 07, 2023
08:02 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை தமன்னா, ரஜினிகாந்த் உடன் நடித்துள்ள'ஜெயிலர்'படம் வெளியீடு குறித்து சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளாராம். இந்நிலையில் இவர் கேரளா கொல்லத்தில் ஒரு ஷாப்பிங் மால் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு பாதுகாப்பாக பவுன்சர்களும் உடன் சென்றுள்ளனர். இதனிடையே தமன்னாவை காண குவிந்தக்கூட்டத்தில் இருந்து ரசிகர் ஒருவர் பவுன்சர்களையும் தாண்டி தமன்னாவின் கையைப்பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தமன்னா பாதுகாவலர்கள் அவரைப்பிடித்து இழுத்தனர். ஆனால் தமன்னா அவரை விடும்படி கூறி, அவருடன் கைகுலுக்கி பேசினார். மேலும் அந்த ரசிகருடன் செல்பி'க்கும் போஸ் கொடுத்துள்ளார். இதனால் மிகவும் சந்தோஷமடைந்த ரசிகர் உற்சாகத்தில் கூச்சலிட்டபடி அங்கிருந்து சென்றார். தமன்னா தனது ரசிகரை கையாண்ட விதம் குறித்த இந்த வீடியோத்பதிவு தற்போது வைரலாகும் நிலையில், அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

நடிகை தமன்னாவின் வீடியோ