Page Loader
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு படையெடுத்த ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ்! ஏன் தெரியுமா?
ஸ்விக்கி நிறுவனம், தனது வேடிக்கையான மார்க்கெட்டிங் முயற்சியாக, பாலிவுட் நடிகர் ஷாருகானுடன் நடைபெற்ற உரையாடலை கையிலெடுத்தது தற்போது வைரலாகி வருகிறது

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு படையெடுத்த ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ்! ஏன் தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 13, 2023
04:40 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், "நீங்கள் உணவு சாப்பிட்டீர்களா, அண்ணா?" என கேட்க, அதற்கு ஷாருக்கானோ "ஏன் தம்பி? நீங்கள் ஸ்விக்கியில் இருந்து வருகிறீர்களா... எனக்கு உணவு வழங்குவீர்களா?" என்று கேலியாக பதில் அளிக்க, அந்த பதிவை கண்ட ஸ்விக்கி நிறுவனமோ, "நாங்கள் ஸ்விக்கியில் இருந்து வருகிறோம், உணவை நாங்கள் டெலிவரி செய்யட்டுமா?" என கேட்டது. அதோடு ஷாருக்கானின் உரையாடலும் நின்றுவிடவே, ஸ்விக்கி நிறுவனமோ தனது ஊழியர்கள் சிலரை மும்பையில் உள்ள ஷாருக்கின் வீடான 'mannat'த்திற்கு நேரே அனுப்பி, அதையும் பதிவிட்டது. உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, நேற்று பதிவிட்டிருந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ரசிகருடன் உரையாடிய ஷாருக்

ட்விட்டர் அஞ்சல்

ஸ்விக்கியின் பதில் 

ட்விட்டர் அஞ்சல்

ஷாருக் வீட்டிற்கு படையெடுத்த ஸ்விக்கி பாய்ஸ்