விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் இணையும் சூர்யா
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர், தெலுங்கு திரையுலகில் உள்ள பிரபல இயக்குனர்களுடன் இணைகின்றனர். தளபதி விஜய், வம்சி பைடபள்ளி என்ற தெலுங்கு இயக்குனருடன் இணைந்து 'வாரிசு' படத்தை தந்தார். அதேபோல, தனுஷ், 'வாத்தி' திரைப்படத்திற்காக வெங்கி அட்லூரி என்பருடன் இணைந்தார். இவரும் தெலுங்கில் முன்னணி இயக்குனர். நடிகர் சிவகார்த்திகேயன், 'பிரின்ஸ்' திரைப்படத்திற்காக அனுதீப் என்ற இயக்குனருடன் இணைந்தார். தற்போது இதே வரிசையில் நடிகர் சூர்யாவும் இணையவுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அக்காண்டா என்ற வெற்றி படத்தை இயக்கிய போயப்பட்டி ஸ்ரீனுவுடன் இணையவுள்ளார், சூர்யா. கங்குவா, வாடிவாசல், சுதா கொங்கராவின் திரைப்படம், கர்ணன், திரைப்படங்களை முடித்த பிறகு இந்த புதிய படத்தில் நடிப்பார் சூர்யா என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு இயக்குனருடன் இணையும் சூர்யா
#Suriya to join hands with director #BoyapatiSreenu pic.twitter.com/FLpByAWD34— ext telugu (@TeluguExt) September 22, 2023