'துரந்தர் 2' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்; இயக்குனர் ஆதித்ய தார் நெகிழ்ச்சி
செய்தி முன்னோட்டம்
பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வரும் 'துரந்தர் 2' திரைப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது அந்த படக்குழுவினருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், "என்ன ஒரு படம்... #Dhurandhar2! ஆதித்ய தார் 'பாக்ஸ் ஆபீஸ் கா பாப்'! ரன்வீர் சிங் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. ஜெய் ஹிந்த்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳 @AdityaDharFilms @RanveerOfficial
— Rajinikanth (@rajinikanth) March 23, 2026
நெகிழ்ச்சி
இயக்குனர் ஆதித்ய தார் நெகிழ்ச்சி
சூப்பர் ஸ்டாரின் இந்த பாராட்டுக்கு உணர்ச்சிப்பூர்வமாக பதிலளித்துள்ள இயக்குனர் ஆதித்ய தார், "உங்களைப் பார்த்துதான் என் சிறுவயதில் பொழுதுபோக்கிற்கு ஒரு தரம் நிர்ணயித்தேன். இத்தனை ஆண்டுகளாக எங்களைச் சிரிக்க வைத்து, அழ வைத்து, விசிலடிக்க வைத்த உங்களைப் போன்ற ஒரு மாபெரும் கலைஞரிடமிருந்து இந்தப் பாராட்டு வந்தது என் வாழ்வின் மிகப்பெரிய தருணம். இது ஒரு ஆசீர்வாதமாகவே எனக்குத் தோன்றுகிறது," என நெகிழ்ந்துள்ளார். மார்ச் 19 அன்று வெளியான இந்தப் படம், கடந்த ஆறு நாட்களில் மட்டும் உலகளவில் ₹829.76 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் ஜாம்பவானாக உருவெடுத்துள்ளது. ரன்வீர் சிங் 'ஹம்சா அலி மசாரி / ஜஸ்கிரத் சிங் ரங்கி' என்ற இரட்டை கதாபாத்திரங்களில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Sir, we’ve all grown up measuring “entertainment” with just one benchmark, YOU. ❤️⁰Making us whistle, laugh, cry and feel larger than life for decades and still doing it with the same swag and grace, that’s pure magic.
— Aditya Dhar (@AdityaDharFilms) March 23, 2026
So for you to call Dhurandhar 2 a “must watch” feels like…