LOADING...
மே 16இல் வருகிறான் மாமன்; நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சூரியின் மாமன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மே 16இல் வருகிறான் மாமன்; நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 14, 2025
05:06 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சூரி முன்னணி வேடத்தில் நடித்துள்ள மாமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சிறிய வேடங்களில் அறிமுகமாகி முன்னணி நகைச்சுவை நடிகராக மாறிய சூரி, தற்போது கதாநாயகனாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 இல் கதாநாயகனாக அறிமுகமான பிறகு, கருடன், கொட்டுக்காளி, விடுதலை பகுதி 2 என அடுத்தடுத்து நல்ல வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில், விலங்கு வெப் சீரீஸ் மூலம் கவனம் ஈர்த்த பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் மாமன் என்ற படத்தில் சூரி தற்போது பணியாற்றி வருகிறார். கருடன் படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கிறது.

நடிகர்கள்

படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள்

இந்த திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். நடிகை ஸ்வாசிகா அவரது சகோதரியாக நடிக்கிறார். இந்த படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து, அதை சுற்றி இருக்கும் உணர்ச்சிகளை படம்பிடித்துக் காட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மாமன் படத்தின் செயற்கைக்கோள் மற்றும் விநியோக உரிமைகளை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படம் மே 16, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக திரையரங்குகளில் வெளியிடப்படும் என நடிகர் சூரி, தனது சமூக ஊடக பக்கங்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 14) அறிவித்துள்ளார். மாமன் தமிழ் சினிமாவில் பல்துறை முன்னணி நடிகராக சூரியை மேலும் நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் சூரியின் எக்ஸ் தள பதிவு