Page Loader
பிரைவேட் ஜெட் முதல் பென்ஸ் கார் வரை, நயன்தாராவிடம் இருக்கும் ஆடம்பர சொத்துக்கள் பற்றி தெரியுமா? 
வாயை பிளக்க வைக்கும் நயன்தாராவின் சொத்து விவரங்கள்

பிரைவேட் ஜெட் முதல் பென்ஸ் கார் வரை, நயன்தாராவிடம் இருக்கும் ஆடம்பர சொத்துக்கள் பற்றி தெரியுமா? 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 20, 2023
05:18 pm

செய்தி முன்னோட்டம்

லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இன்றி, சொந்த உழைப்பால் முன்னேறியவர் என அனைவரும் அறிவார்கள். சின்னத்திரையில் வர்ணனையாளராக துவங்கியவர், தற்போது, இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக வளர்ந்துள்ளார். தனது கதாபாத்திரத்திற்கு ஏற்பவும், கதைக்கு ஏற்பவும், 5 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிற காஸ்ட்லி நடிகை எனவும் கூறப்படுகிறது. சரி, அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். சினிமாவில் நடிப்பது தவிர நயன்தாரா ஒரு பிசினஸ்வுமன் என எத்தனை பேருக்கு தெரியும்? அப்படி அவர் சம்பாதித்து பல சொத்துக்களையும் சேர்த்து வைத்துள்ளார். நயன்தாராவின் வசம் இருக்கும் ஆடம்பர சொத்து பட்டியல் இதோ:

card 2

ஷூட்டிங் போவதற்காகவே தனி விமானம்!

பிரைவேட் ஜெட்: தென்னிந்திய நடிகைகளில், பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் நடிகை நயன்தாரா தான். இந்தியா முழுவதும் ஷூட்டிங்காக பயணம் செய்ய நேரிடுவதால், அதை வாங்கியுள்ளார். விக்னேஷ் சிவனுடன் கொச்சின், ஹைதராபாத், மும்பை பயணத்திற்கு, இதை பயன்படுத்துவார். சொகுசு பங்களா: சென்னையில் ஒரு தனி பங்கவும், அபார்ட்மெண்டும் உள்ளது. அதோடு, கேரளா, ஹைதராபாத் மற்றும் மும்பையிலும் வீடு வாங்கியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. கார்கள்: நயன்தாரா வசம், பல சொகுசு கார்கள் உள்ளன. BMW 5s சீரிஸ், ஒரு Mercedes GLS 350 D, ஃபோர்டு எண்டெவர், ஒரு BMW 7 சீரிஸ், இன்னோவா கிரிஸ்ட்டா. என இவர் அவர் வைத்திருக்கும் கார்களின் மதிப்பு மட்டுமே 5 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.