Page Loader
மலையாள சினிமாவில் களமிறங்கும் நடிப்பு அசுரன் SJ சூர்யா 
SJ சூர்யா ஃபஹத் பாசிலுடன் இணைந்து மலையாளத் திரையுலகில் களமிறங்க உள்ளார்

மலையாள சினிமாவில் களமிறங்கும் நடிப்பு அசுரன் SJ சூர்யா 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 06, 2024
02:45 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் 'நடிப்பு அசுரன்' என புகழப்படும் நடிகரும் இயக்கனருமான SJ சூர்யா ஃபஹத் பாசிலுடன் இணைந்து மலையாளத் திரையுலகில் களமிறங்க உள்ளார். சமீபத்திய செய்தியின்படி, விபின் தாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ஒரு மலையாள திரைப்படத்தில், அவர் ஃபஹத் பாசிலுடன் இணைந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி சினிமா ரசிகர்கள் மற்றும் தொழில்துறை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. ஏனெனில் இருவருமே அபார நடிப்பை வெளிப்படுத்துவார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் இது ஒரு சுவாரஸ்யமான முயற்சியாக இருக்கும். எனினும் இந்த தகவல் குறித்து, படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இப்படத்தை 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் விபின் தாஸ் இயக்குகிறார்.

embed

மலையாள சினிமாவில் SJ சூர்யா

#SJSuryah to Debut in Mollywood 🔥 He is going to an important role in an upcoming film with #FahadhFaasil 💥 Directed by Vipin Das (Jaya Jaya Jaya Hey Fame)🎬 2 Peak Performers in a same film🤞🥵 pic.twitter.com/Lj0sFrdvxh— AmuthaBharathi (@CinemaWithAB) April 6, 2024