LOADING...
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம்: பொங்கல் ரேஸில் 'ஜனநாயகன்' படத்துடன் மோதுகிறது
அதிகாரப்பூரவ அறிவிப்பின் படி, 'பராசக்தி' ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம்: பொங்கல் ரேஸில் 'ஜனநாயகன்' படத்துடன் மோதுகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Dec 22, 2025
06:45 pm

செய்தி முன்னோட்டம்

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு பெரிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதில் ஒன்று விஜயின் 'ஜனநாயகன்'. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியான அதிகாரப்பூரவ அறிவிப்பின் படி, இந்த படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 'பராசக்தி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிரடியாக மாற்றப்பட்டிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் ஜனவரி 14-ஆம் தேதி (பொங்கல் அன்று) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த 'பராசக்தி', தற்போது நான்கு நாட்களுக்கு முன்னதாகவே, வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

விநியோகஸ்தர்கள் தொடர் கோரிக்கையில் வெளியீட்டு தேதியில் மாற்றம்

உலகெங்கிலும் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தகர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனர் டான் பிக்ச்சர்ஸ் தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவும், அதிகப்படியான திரையரங்குகளைக் கைப்பற்றவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 'அமரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால், 'பராசக்தி' படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கம் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் உடன் அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் ரவி மோகன் நடிக்கிறார். படத்தின் இசை ஜி.வி.பிரகாஷ் மேற்கொள்கிறார்.

Advertisement