
2024 பொங்கலுக்கு வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம்
செய்தி முன்னோட்டம்
ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'.
இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், முன்னதாக இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது இப்படம் அடுத்த வருடம் 2024ல் பொங்கலுக்கு வெளியிடப்படவுள்ளது என்று படக்குழு ஓர் போஸ்டரினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
சயின்ஸ் ஃபிக்க்ஷன் கதைக்களத்தினை கொண்ட இப்படம் ஏலியனை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம்.
இதன் கிராபிக்ஸ் மற்றும் விஷுவல் எபக்ட்ஸ் பணிகளுக்கு தயாரிப்பு நிறுவனம் ரூ.40 கோடி செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறியது ‘அயலான்'#Ayalaan #Sivakarthikeyan #Pongal2024 #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/MC9gDGGR7p
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 23, 2023