Page Loader
7ஜி ரெயின்போ காலனி-2 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது 
7ஜி ரெயின்போ காலனி-2 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது

7ஜி ரெயின்போ காலனி-2 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 23, 2023
05:16 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான், '7ஜி ரெயின்போ காலனி'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இந்த படம் மூலமாக, ரவி கிருஷ்ணா நடிகராக அறிமுகமானார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே மிக பெரிய ஹிட் ஆனது. தற்போது கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கழித்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக செய்திகள் வெளியானது. அதற்கான கதை, திரைக்கதை எழுதும் பணியில் மூழ்கியிருந்த இயக்குனர் செல்வராகவன், தற்போது அதை முடித்துவிட்டதாகவும், படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் துவங்கவுள்ளதாக தற்போது கூறப்படுகிறது. இப்படத்திலும், ரவி கிருஷ்ணா தான் ஹீரோ. நாயகியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

7ஜி ரெயின்போ காலனி-2