Page Loader
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் 'கடைசி ஆசையை' நிறைவேற்றிய ஷாருக்கான்!
புற்று நோய் பாதிக்கபட்டவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஷாருக் கான்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் 'கடைசி ஆசையை' நிறைவேற்றிய ஷாருக்கான்!

எழுதியவர் Arul Jothe
May 24, 2023
11:45 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில நாட்களாக பாலிவுட்டின் சுப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ரசிகர் ஒருவரின் ட்வீட், ட்விட்டரில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ப்ரியா சக்ரவர்த்தி என்ற ட்விட்டர் பயனர் தனது தாயின் "கடைசி ஆசையை" பகிர்ந்து கொள்ள ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அவரது 60 வயதான தாயார் ஷிவானி சக்ரவர்த்தி, புற்றுநோய் பாதிக்கப்பட்டவர். மேலும் அவரது "கடைசி ஆசை" சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை சந்திப்பதாகும். இதனையடுத்து, ஷாருக்கான் வீடியோ அழைப்பின் மூலம் சுமார் 40 நிமிடம் ஷிவானியுடன் பேசி, அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றினார். இந்த வீடியோ அழைப்பின் படங்கள் பல தளங்களில் வைரலானது.

Sharukh Khan

ஸ்கிரீன் ஷாட் வைரல்

இதற்கிடையில், ஷிவானி சக்ரவர்த்தியின் மகள் பிரியா சக்ரவர்த்தி அளித்த பேட்டியில், "ஷாருக், எனது தாயார் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறினார்" என்றும் "எனது திருமணத்திற்கு அவர் வருவதாகவும், எங்கள் சமையலறையில் செய்த முள்ளில்லாத மீனின் குழம்பை சாப்பிட வருவதாகவும், ஷாருக் என் அம்மாவிற்கு வாக்குறுதி அளித்தார்" என்றும் தெரிவித்தார். வீடியோ அழைப்பின் ஸ்கிரீன் ஷாட் தற்போது வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக படங்களில் இருந்து விலகியிருந்த ஷாருக்கான், இந்த ஆண்டு தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாமுடன் இணைந்து 'பதான்' என்ற ஸ்மாஷ் ஹிட் படத்தில் நடித்தார். அடுத்ததாக அட்லீயின் ஜவான் படத்தில் நயன்தாரா, சன்யா மல்ஹோத்ரா மற்றும் விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post