செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனி-2 - படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடக்கம்!
செய்தி முன்னோட்டம்
கோலிவுட் சினிமாவில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டில் வெளியான படம் தான் 7ஜி ரெயின்போ காலனி.
இந்த படத்தில், நடிகர்கள் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் செட்டி, மனோரமா போன்ற பலர் நடித்துள்ளனர்.
இளைஞர்களை கவர்ந்த இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றியை பெற்றது.
யுவன் இசையில், நா முத்துகுமாரின் பாடல் வரிகள் இன்று வரை ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் 2வது பாகம் இந்த ஆண்டு ஜுன் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் அதே நாயகன் ரவி கிருஷ்ணா இருப்பார் எனவும், யுவன் இசை இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படிப்பிடிப்பை முடிக்க உள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#CinemaUpdate | ‘7 ஜி ரெயின்போ காலனி-2’ படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்கவுள்ளதாக தகவல்!#SunNews | #7GRainbowColony | @selvaraghavan pic.twitter.com/THTsnZcmVh
— Sun News (@sunnewstamil) April 25, 2023