
'இறைவன்' படத்தின் இரண்டாவது லிரிக்கல் வீடியோ பாடல் வெளியானது
செய்தி முன்னோட்டம்
'என்றென்றும் காதல்', 'மனிதன்' உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனரான அகமது இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் தான் 'இறைவன்'.
இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது என்று கூறப்படுகிறது.
சைக்கோ மற்றும் திரில்லர் கதையினை பின்னணி கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் 2வது 'இது போல' என்னும் லிரிக்கல் வீடியோ பாடலை இணையத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
'இறைவன்' படத்தின் 2வது சிங்கிள்
The melancholic chapter #IdhuPola from #Iraivan ❤️🩹https://t.co/OSNbSUSq9O
— Jayam Ravi (@actor_jayamravi) September 16, 2023
Gloomy rounds to stay away from the pain !!😊#IraivanFromSep28 #Nayanthara @Ahmed_filmmaker @thisisysr @PassionStudios_ @eforeditor @jacki_art @Dophari @Synccinema @MangoPostIndia @gopiprasannaa… pic.twitter.com/DRzdNHn4Zr