Page Loader
உடல்நிலையை கவனிக்க, நடிப்பிலிருந்து ஒரு வருடம் ஓய்வெடுக்க சமந்தா திட்டம்? 
ஒரு வருடம் ஓய்வு எடுக்க சமந்தா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

உடல்நிலையை கவனிக்க, நடிப்பிலிருந்து ஒரு வருடம் ஓய்வெடுக்க சமந்தா திட்டம்? 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 05, 2023
11:47 am

செய்தி முன்னோட்டம்

நடிகை சமந்தா ரூத் பிரபு, கடந்த ஆண்டு, மயோசிடிஸ் எனப்படும் தன்னுடல் தாக்க நோயால் பாதிக்கப்பட்டதாக அறிவித்தார். அதன்பிறகு, அவ்வப்போது, தன்னுடைய உடல்நிலை குறித்தும், அதிலிருந்து மீள்வதற்கு தான் எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும், தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தார். அதோடு, அவரின் திருமண முறிவும், அதை தொடர்ந்து அவர் மனநிலையை முன்னேற்ற அவர் மேற்கொண்ட ஆன்மீக பயணங்கள் குறித்தும் அவர் தெரிவிப்பதுண்டு. மயோசிடிஸ் நோய் பாதிப்பிற்கு ஆளான பிறகும், அவர் தொடர்ந்து பல படங்கள் நடித்து வந்தார். அதோடு படத்தின் ப்ரோமோஷன் வேலைகளிலும் ஈடுபட்டு வந்தார். எனினும், அவரின் கடைசி படமான 'சாகுந்தலம்' எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

card 2

நடிப்பிலிருந்து பிரேக் எடுக்கும் சமந்தா

இதற்கிடையில், 'சிட்டாடல்' என்ற அமெரிக்க-ஸ்பை தொடரின் இந்தியா பதிப்பில் நடிக்க ஒப்பந்தமானார் சமந்தா. பாலிவுட் நடிகர் வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார். இதற்காக வெளிநாடுகளில் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளது படக்குழு. இது மட்டுமின்றி, தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன், 'குஷி' என்ற படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் பாடல் கூட சமீபத்தில் வெளியானது. இந்த இரு படங்களைத்தொடர்ந்து, அவர் சிறிது ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவரின் உடல்நிலை மீது கவனம் செலுத்தவும் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதற்காக, அவர் அடுத்த படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது