Page Loader
பாலி தீவில், சமந்தாவின் கண்ணாடியை திருடிய குரங்கு
சமந்தாவின் கண்ணாடியை திருடிய குரங்கு

பாலி தீவில், சமந்தாவின் கண்ணாடியை திருடிய குரங்கு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 26, 2023
01:05 pm

செய்தி முன்னோட்டம்

'சிட்டாடெல்' என்ற வெப்-தொடரின் படப்பிடிப்பை முடித்த கையோடு, ஈஷா மையத்திற்கு சென்ற சமந்தா, தனது ஆன்மீக பயணத்தை முடித்துக்கொண்டு, தற்போது தனது தோழியுடன் பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த தீவின் அழகை படம்பிடித்து காட்டும் சமந்தா, அவரது இன்ஸ்டா ஸ்டோரியில், ஒரு சில புகைப்படங்களையும், ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், முதல் புகைப்படத்தில், "இதுதான் நான் கடைசியாக என்னுடைய கண்ணாடியை பார்த்தது" என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, ஒரு குரங்கு கையில் அவர் கண்ணாடி அகப்பட்டுள்ளதை போலவும், அதை ஒரு நபர் மீட்க போராடுவது போன்ற வீடியோ ஒன்றை பகிர்ந்து, "அவனுக்கு நல்ல டேஸ்ட்" என சோகமான எமோஜி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். சமந்தாவின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Instagram அஞ்சல்

பாலியில் சமந்தா