'விடாமுயற்சி'-யில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன்; 12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் காம்போ
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, தற்போது அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது, அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது.
நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், இவர் ஏற்கனவே அஜித்தின் வலிமை, துணிவு, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த செய்திகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், அதற்கான பணிகள் தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
அஜித்
12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அஜித்-அர்ஜுன்
இதனிடையே நடிகர் அஜித் வெளிநாடுகளுக்கு பைக் ரைடு சென்று அண்மையில் திரும்பினார்.
அவர் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்க துவங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் அஜித் தனது பைக்கில் நார்வே, டென்மார்க், ஜெர்மனி, போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினை அளித்துள்ளது.
இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி, நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
'மங்காத்தா' படத்தில் நடிகர் அஜித்துடன் அர்ஜுன் இணைந்து நடித்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இவர்கள் ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.