Page Loader
ஜப்பானில் முத்து படத்தின் சாதனையை முறியடித்து வசூலில் புதிய சாதனை செய்த  'RRR'
RRR வசூல் சாதனை

ஜப்பானில் முத்து படத்தின் சாதனையை முறியடித்து வசூலில் புதிய சாதனை செய்த 'RRR'

எழுதியவர் Saranya Shankar
Dec 17, 2022
06:58 pm

செய்தி முன்னோட்டம்

2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியான திரைப்படம் 'RRR' . எஸ்.எஸ்.ராஜமௌலி இந்த படத்தின் இயக்குனர் ஆவார். இப்படத்தில் N. T. ராமாராவ் ஜூனியர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஷ்ரியா சரண், சமுத்திரக்கனி, ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி மற்றும் ஒலிவியா மோரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இது, இந்த இந்தியப் புரட்சியாளர்களான அல்லூரி சீதாராம ராஜு (சரண்) மற்றும் கொமரம் பீம் (ராம ராவ்) அவர்களின் கற்பனையான நட்பு மற்றும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிரான அவர்களின் போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது. 25, மார்ச் 2022 அன்று பல மொழிகளில் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டு உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றது.

வசூல் சாதனை

வசூல் சாதனையை படைத்த ராஜமௌலியின் 'RRR'

உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 1150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனையை செய்தது. இது ராஜமௌலியின் முந்தைய படமான பாகுபலி-2 வசூல் சாதனையை விட அதிகம். இந்நிலையில் இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி ஜப்பானில் வெளியிடப் பட்டது. 44 நகரங்களில் 209 ஸ்க்ரீன்கள் மற்றும் 31 ஐமேக்ஸ் திரைகளில் வெளியிடப் பட்ட இந்த திரைப்படம் சுமார் 50 நாட்களும் மேல் ஓடி 24.10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது 22 வருடங்களுக்கு முன் வெளிவந்து, ஜப்பானில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடி, 23.50 கோடி ரூபாய் வசூல் செய்த ரஜினியின் முத்து சாதனையை முறியடித்துள்ளது.