'நன்றி முதல்வர் விஜய்ணா!': தியேட்டர்களில் தெறிக்கும் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்
செய்தி முன்னோட்டம்
நடிகர் சூர்யாவின் நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான 'கருப்பு' திரைப்படம், பல்வேறு நிதிச் சிக்கல்களைக் கடந்து இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் ரிலீஸை உறுதி செய்ய சூர்யா நேரடியாகத் தலையிட்டு நிதிப் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தது, அவரது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், 'கருப்பு' படத்திற்கு காலை 9 மணிக்கே சிறப்பு காட்சி அனுமதி வழங்கினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திரையரங்குகளில் "எங்கள் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு சிறப்பு நன்றி" என்ற கார்டு திரையிடப்பட்டது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து, சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து சூர்யாவின் படத்திற்குத் தங்களின் அமோக ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Karuppu Special Thanks card to our nanbar #CMVijay ♥️💥 pic.twitter.com/TArG0t1dVc
— Karthick (@OSFCKarthick) May 15, 2026
ஃப்ரெண்ட்ஸ்
விஜய்- சூர்யா நட்பை பாராட்டிய ரசிகர்கள்
தற்போது முதல்வராக பதவியேற்றுள்ள விஜய், சூர்யாவின் முதல் படமான 'நேருக்கு நேர்' படத்தில் அவருடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வசந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் மூலம் இருவரின் நட்பும் வளர்ந்தது. அதே போல, ஃப்ரெண்ட்ஸ் படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். தற்போது விஜய் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றிருப்பினும் சூர்யாவின் படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கியதை எண்ணி இருவரின் ரசிகர்களும் உணர்ச்சிவசப்படுகின்றனர்.
ஆர்.ஜே. பாலாஜி
கண்ணீர் விட்ட ஆர்.ஜே. பாலாஜி; நெகிழ்ச்சியான வரவேற்பு
படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடித்தபோது, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதது அனைவரையும் கலங்கச் செய்தது. ஆனால், இன்று படம் வெற்றிகரமாக வெளியானதை அடுத்து, தியேட்டருக்கு வந்த அவருக்கு ரோசாப்பூ மாலை அணிவித்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் கார்த்தி ஆகியோர் பாலாஜியை கட்டிப்பிடித்து தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், த்ரிஷா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இடையே மோதல் எனப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தியேட்டரில் இருவரும் நட்புடன் உரையாடியது கவனத்தைப் பெற்றது