
ரஜினியின் 'லால் சலாம்' திரைப்படத்தை வெளியிடுகிறது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'.
இப்படத்தில் ரஜினிகாந்த் 'மொய்தீன் பாய்' என்னும் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்று தகவல்கள் முன்னதாகவே வெளியிடப்பட்டிருந்தது.
இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா ராஜசேகர், கபில் தேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் வரும் 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்று படக்குழு அண்மையில் அறிவித்துள்ளது.
மேலும் இப்படத்தினை ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது என்றும் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ரிலீஸ் தகவல்
#JUSTIN || பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது ரஜினி நடிக்கும் லால் சலாம் #pongal #laalsalaam #SuperstarRajinikanth pic.twitter.com/iwn18e7gK0
— Thanthi TV (@ThanthiTV) October 12, 2023