தான் விபத்தை சந்தித்தாக நடிகை ரஷ்மிகா மந்தனா ட்வீட்
நடிகை ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் ஒரு சிறிய விபத்தில் சிக்கியதாக அவர் செய்தி ஒன்றை வெளியிட்டார். அவரின் இந்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று, செப்டம்பர் 9, திங்கட்கிழமை X இல் ஒரு இடுகையில், அவர் இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார். எனினும் தற்போது அவர் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதே பதிவில், ரஷ்மிகா ரசிகர்களை தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளவும், எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கு முன்னுரிமை அளிக்கவும் வலியுறுத்தினார். மேலும் அந்த விபத்து காரணமாக மருத்துவர்கள் தன்னை ஓய்வில் இருக்க வலியுறுத்தியதால், தான் பொது வெளியிலும், சோசியல் மீடியாவில் காணப்படவில்லை எனத்தெரிவித்தார். நடிகை ரஷ்மிகா தற்போது அல்லு அர்ஜுன் உடன் இணைந்து 'புஷ்பா 2' படத்தில் நடித்து வருகிறார்.