மனைவி தீபிகாவை தொடர்ந்து கணவர் ரன்வீரும் படங்களிலிருந்து விலக்கப்பட்டாரா? 'டான் 3' குறித்து புதிய தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
பிரபல பாலிவுட் இயக்குநர் ஃபர்ஹான் அக்தரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'டான் 3' திரைப்படத்திலிருந்து நடிகர் ரன்வீர் சிங் தானாக விலகிவிட்டதாக நேற்று பரவிய வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின்படி, உண்மை நிலை முற்றிலும் வேறாக இருப்பதாக தோன்றுகிறது. சமீபத்திய அறிக்கைகளின்படி, ரன்வீர் சிங் படத்திலிருந்து தானாக முன்வந்து விலகவில்லை. மாறாக, படத்தின் தயாரிப்பாளர்கள் அவர் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட "ஏற்க முடியாத சில நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகள்" காரணமாக அவரைப் படத்திலிருந்து நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரன்வீரின் மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோனும் இதே போல 'ஏற்கமுடியாத கோரிக்கைகளினால்' கல்கி உள்ளிட்ட படங்களில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விவரங்கள்
ரன்வீர் 'விலகல்' குறித்து முக்கிய விவரங்கள்
ரன்வீர் சிங் தொடர் தோல்விகளைச் சந்தித்தபோது, தயாரிப்பு தரப்புஅவர் மீது நம்பிக்கை வைத்து இந்த மெகா பட்ஜெட் வாய்ப்பை வழங்கினர். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. ரன்வீர் சிங் தனது சமீபத்திய படமான 'துரந்தர்' வெற்றியால், லோகேஷ் கனகராஜ் அல்லது அட்லீ போன்ற இயக்குநர்களுடன் பணியாற்ற விரும்புவதாகவும், அதனால் 'டான் 3' படத்திலிருந்து விலகியதாகவும் செய்திகள் பரவின. ஆனால், இது முற்றிலும் தவறானது எனத் தயாரிப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக்கான் போன்ற ஜாம்பவான்கள் நடித்த 'டான்' கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை ரன்வீர் சிங் இழந்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.